ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்கு தமிழர்கள் அளித்த நிராதரவின் மூலம் தமிழர்களின் நிறவெறி மிக அப்பட்டமாக தெரிகிறது. வெள்ளைக்காரன் எந்த கருமத்தை எடுத்தாலும் ஆவென்று வாய் பிளந்து ரசிக்கும் நம் மக்கள் நம் இனத்தை சார்ந்த ஒருவன் மிக பிரம்மாண்டமான முற்றிலும் வித்யாசமான கதையம்சம் கொண்ட அருமையான திரைபடத்தை எடுத்திருக்கிறான் ஆனால் அவனுக்கு நாம் அளித்த ஆதரவு என்ன?

ஆயிரத்தில் ஒருவன் திரைபடத்தின் விமர்சனங்கள் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. ஒரு சிலர் படம் நன்றாகவே இல்லை இரண்டாம் பகுதி மிக மோசமாக உள்ளது என்றனர் மற்றும் சிலர் படம் மிக பிரம்மாண்டமாக உள்ளது மிரட்டலாக உள்ளது இதுவரை இப்படி ஒரு படம் தமிழில் வரவில்லை என்றனர். நிறைய முறை முயற்சி செய்து போனவாரம்தான் பார்க்க முடிந்தது. சர்வதேச திரைப்படத்திற்கான அதனை அம்சங்களும் இப்படத்தில் உள்ளன,  கடலில் ஒளிவீசும் கொலைகார பூச்சிகள், நரமாமிசம் தின்னும் காட்டு மனிதர்கள், ஆவேசமுடம் சண்டையிடும் வேல் வீரர்கள் என்று அடுக்கி கொண்டே போகலாம். கிங் சாலமன் மின்ஸ், இன்டியான ஜோன்ஸ் போன்ற ஆங்கில அட்வென்ச்சர்  படங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை என்பதே என் கருத்து. இதை பலர் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். இதுபோன்ற கதையம்சமும் காட்சிகளும் தமிழுக்கு புதுசு. கதாநாயகர்களை முதலமைச்சர் ஆக்குவதற்கு அஸ்திவாரம் போடும் வணிக சினிமாக்களையே பார்த்து பழகிப்போன நம் மக்கள் இத எளிதில் ஏற்றுகொள்ள மாட்டார்கள். வெயில், சுப்ரமணியபுரம் போன்ற நல்ல தரமுள்ள, கதையம்சமுள்ள திரைப்படங்கள் மிக அரிதாகவே தமிழில் வருகின்றது வெற்றியும் பெறுகின்றது. நிறைய பேர் படத்தின் இரண்டாம் பாதி செம்ம போர் என்றனர் ஆனால் எனக்கு இரண்டாம் பாதி தான் மிகவும் பிடித்தது. காட்சிகள் படு பிரம்மாண்டமாக இருந்தது பார்த்திபன் மற்றும் ரீமா சென்னின் தங்களின் நடிப்பு திறமையை நன்றாக வெளிப்படுத்தி இருந்தனர். செல்வராகவன் மற்றும் அவரது குழுவின் உழைப்பிற்கு மரியாதை கலந்த பாராட்டுக்கள்.

Advertisements