Category: தமிழ் இடுகைகள்


Advertisements

check out these links to see few more photographs of writer charu nivedita

http://prabhuramakrishnan.wordpress.com/2011/09/04/writer-charu-nivedita-the-french-man/

http://prabhuramakrishnan.wordpress.com/2011/06/12/writer-charu-nivedita-%E2%80%93-an-exclusive-photoshoot-2/

http://prabhuramakrishnan.wordpress.com/2011/06/12/writer-charu-nivedita-%E2%80%93-an-exclusive-photoshoot/

Part 2

Part 3

Part 4

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் மாற்றுதிரனாளிகளின் பங்கு பற்றிய ஆலோசனை கூட்டத்தில் என்னுடைய மொபைல் காமெராவில் எடுத்த பேட்டி

தயவுசெய்து இந்த வீடியோவை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.

அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்

இதுவரை எந்த கவிதை நூல் வெளியீட்டுு விழாவிற்கும் நான் சென்றதில்லை ஆகையால் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ‘இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்’ என்ற கவிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன்.

பல்லாவரத்தில் ஒரு வேலை இருந்ததால் அதை அவசரமாக முடித்துவிட்டு அங்கிருந்து நேராக தேவநேய பாவாணர் நூலகத்திற்கு விரைந்து சென்று சேர்வதற்குள் எஸ்.ராமகிருஷ்ணன் பேசி முடித்துவிட்டிருந்தார்.

நா முத்துக்குமார் பேசிகொண்டிருந்தார். பேசிய அனைவரும் மிகச்சிறப்பாக பேசினார்கள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு பிடித்த கவிஞர் பிரமீள், கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளையும் நான் நிறைய படித்துள்ளேன். இவ்விழாவில் கிடைத்த அனுபவம் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை இன்னும் ஆழமாக படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

விழாவிற்கு வந்திருந்த வாசகர் ஒருவர் எழுத்தாளர் சாரு பேசி முடித்தவுடன் அவருக்கு ஒரு மோதிரத்தை அணிவித்து அசத்தினார்.

மனுஷ்யபுத்திரன் பேசும்போது எழுத்தாளர் சுந்தர ராமசாமியை பற்றி ஒரு சம்பவத்தை கூறினார் எனக்கு வியப்பாக இருந்தது. தமிழ் எழுத்துலகில் ஜாம்பவானாக கருதப்படும் அவர் எப்படி இது போன்ற ஒரு காரியத்தை செய்தார் என்று தெரியவில்லை ஏன் அவருக்கு ஒரு சிறந்த கவிஞனின் கவிதை புத்தகத்திற்கு ஒரு முன்னுரையோ அபிப்ராயமோ சொல்ல மறுத்துவிட்டார்? இது ஒரு சின்ன சம்பவமாக இருந்தாலும் இத்தனை வருடம் கழித்து இதை மனுஷ்யபுத்திரன் நினைவு கூறும்போது கவனிக்கப்படுகிறது.

நம் சமகாலத்தின் சிறந்த கவிஞனான மனுஷ்யபுத்திரனை நாம் கொண்டாடவேண்டும். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன்.

please click these links to listen the speeches of the guests

மனுஷ்யபுத்திரன்

சாரு நிவேதிதா

பிரபஞ்சன்

தமிழச்சி

பாரதி கிருஷ்ணகுமார்

வசந்த பாலன்

if the links above not working plz click the link below

http://prabhuramakrishnan.podbean.com/

 

plz click here to download the speeches

http://www.filedropper.com/manushyaputhiran

இந்த பதிவுகளில் நடு நடுவே என் சிரிப்பு சத்தம் பயங்கரமாக கேட்கும் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் 🙂

அன்புடன்,

பிரபு ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீட்டு விழா ஒரு திருவிழா போல மிக சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் இனிதே நடந்தது.
அதைப்பற்றி விவரமாக இன்று இரவு எழுதுவேன். before that i would like to share myshkin and thamizhachi’s speech with you which i recorded at the function using my mobile. வெளியூர் சென்றுவிட்டதால் உடனடியாக இதை பதிவேற்றம் செய்ய முடியவில்லை தாமதத்திற்கு மன்னிக்கவும்.
இன்னும் சிலவற்றை விரைவாக பதிவேற்றம் செய்து விடுகிறேன்.செல்போனில் எடுத்ததனால் ஆடியோ குவாலிடி கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும்:)

myshkins speech

thamizhachi’s speech

http://www.muziboo.com/prabhu15/music/kavignar-thamizhachi-charus-book-launch-2010/
அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்

“அவன் பயங்கர குடிகாரன் அவன் எழுத்தை படிக்காதே”
“அவன் ஒரு பெண் பித்தன் இவன் எழுத்தை எல்லாம் ஏன் படித்துகொண்டிருக்கிறாய்”
“அவன் ஒரு சாதி வெறி பிடித்தவன் இவன் புத்தகங்களை போய் படிக்கிறாயே”

இந்த மாதிரி வாக்கியங்களை யாரேனும் உங்களிடம் கூறிக்கொண்டே இருக்கின்றனரா? நீங்கள் தீவிர இலக்கிய வாசகராக இருந்தால் நிச்சயமாக இதுபோன்ற வார்த்தைகளை யாரேனும் உங்களிடம் கூற கேட்டுருப்பீர்கள். நிச்சயமாக நீங்கள் படிக்க வேண்டிய கட்டுரை இது. பதிவுலகில் ஒரு காமெடியன் இருக்கிறார் ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரின் எழுத்தை தேடி தேடி படித்துவிட்டு பிறகு அந்த எழுத்தாளரை திட்டி பதிவு போடுவதே இவரின் வேலை அவரும் இதை படிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

கட்டுரை எழுதியவர்: எழுத்தாளர் அ.முத்துலிங்கம்

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3061

‘கன்னாடி கோப்பையில் நுரை வராமல் அழகாக பியரை ஊற்றுபவனும் ஒரு கலைஞனே’

என் நண்பன் எழுதிய பின்னூட்டம் “kannadi ku 3 suzhi ண dan varum…neenga beer bodai la ye type panningala? “

-அதற்கு நான் எழுதியது –

“எழுத்து பிழைகளுக்கு மன்னித்துவிடு நண்பா!!
தலையெழுத்தே பிழையாக இருக்க
எழுத்து பிழைக்கு வருந்தி என்ன பயன் எனக்கு.
சுழியும் கோப்பையும் ஒன்றாக கருதி
இரண்டு கோப்பையுடன் நிறுத்திவிட்டேன்.
குடித்துவிட்டு கவிதை எழுத நினைத்தது தவறுதான்
குடித்துவிட்டு பிதற்றினால் அது கவிதையாக முடியுமா?
அது உளறல்தானே?
அதை கவிதையென்று நினைத்தால் நம் நாட்டில் முக்கால்வாசி பேர்
கவிஞர்களே.
உளறலோ பிதற்றலோ என்ன பெயர் வைத்தாலும்
கவிஞனை கொண்டாட மறுக்கும்
இச்சமூகத்தில் வாழ்வதை விட
குடித்து உளறி சாவதே மேல் என்று கருதுகிறேன்.
உன் ஆசைப்படியே இன்னொரு சுழியை சேர்த்துக்கொள்கிறேன்
தலை கிறுகிறுக்க சாய்கிறேன் சொகுசு நாற்காலியில்”

– போதையுடன் பிரபு ராமகிருஷ்ணன்

உயிர்மை சார்பாக நடக்கும் அணைத்து விழாக்களுக்கும் எனக்கு அழைப்பிதழ் அஞ்சலில் வந்துவிடும் ஆனால் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் என்பதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியை பற்றி சாருவின் இணையத்தளத்தில் தான் பார்த்து தெரிந்துகொண்டேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன் இந்நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று உயிர்மை இந்த விழாவிற்கும் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர் ஆனால் சரியாக விழா நடக்கும் அதே நாளில்தான் வந்து சேர்ந்தது.

சரியாக 5 .30 க்கு விழா அரங்கிற்கு சென்றுவிட்டேன். வெளியே இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சிலருடன் நின்று பேசிகொண்டிருந்தார். அவரிடம் எப்படியாவது ஆடோக்ராப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இரண்டு முறை முயற்சித்தும் முடியவில்லை ஆதலால் தயாராக அவர் எழுதிய எனக்கு பிடித்த ‘குருதிப்புனல்’ நாவலை கையில் வைத்திருந்தேன் லிப்டில் அவர் அரங்கம் இருக்கும் முதல் மாடிக்கு வந்தவுடன் அவரை மடக்கி அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். பிறகு சாரு அவர்களுக்கு வெளியே காத்திருந்தேன் அவர் எழுதிய ‘வரம்பு மீறிய பிரதிகள்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கிடவேண்டும் என்று ஒரு சின்ன சபதம் 6 மணி வரை சாரு வரவில்லை பின்பு உள்ளே சென்று விட்டேன். கடைசியில் ஒரு வழியாக சாருவை சந்தித்து என்னை அறிமுகம் செய்துகொண்டு எனக்கு பிடித்த புத்தகமான வரம்பு மீறிய பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்.

சுமார் 6 .30 க்கு மனுஷ்யபுத்ரனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து தமிழ் சமூகம் நம் எழுத்தாளர்களை உதாசீனப்படுத்துவது அவர்களுக்கு முறையான அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது பற்றி மிகவும் தெளிவாவகம், உண்மையாகவும் நன்றாக உரைக்கும் படியும் பேசினார் நிச்சயமாக இதை பதிவு செய்து அணைத்து சேனல்களிலும் ஒளிபரப்பி இருக்க வேண்டும் அட்லீஸ்ட் இணையத்திலாவது பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர்களின் குரலாகவே அவரின் பேச்சி இருந்தது.கேரளாவில் ஒரு நாவலளுக்கு வெள்ளி விழா கொண்டாடும் அளவிற்கு எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். இங்கு ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு என்ன செய்தோம் என்று கூறினார் எனக்கு என்னை செருப்பால் அடித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது ஒரு வாசகனாக நானும் எதுவும் செய்யவில்லையே என்று தோன்றியது.

பிறகு prof .சி.டி.இந்திரா அவர்கள் சுமார் நாற்பது நிமிடம் ஆங்கிலத்தில் நடு நடுவே தமிழிலும் பேசி சொர்பொழிவாற்றினார். அவருக்கு பிறகு ஆறு பேர் பேச இருக்க அவர் நாற்பது நிமிடம் பேசியது மிகவும் வேதனையான ஒன்று. இதுவே நான் என் நண்பர்களுடன் கும்பலாக போயிருந்தால் கைதட்டி ஒரு சின்ன கலாட்டா செய்து ஒரு இருபது நிமிடத்தை சேமித்திருப்பேன்.ஆனால் இந்த வயதிலும் அவர் இவ்வளவு முயற்சி எடுத்து இவ்வளவு நேரம் பேசியதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

பிறகு ஞானக்கூத்தன், இமயம், எஸ்.ராமகிருஷ்ணன், அ.ராமசாமி, ரவிக்குமார் பேசினார்கள். இமயம் அவர்கள் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள் பற்றி ஒரு மிக நீண்ட ஆய்வறிக்கையை படித்து காட்டினார் நன்றாகவே இருந்தது.
இந்த விழாவின் ஷோ ஸ்டாப்பர் எஸ்.ராமகிருஷ்ணன்தான் மிக அற்புதமாக பேசினார் அதை நான் பதிவு செய்திருக்கிறேன்.

கடைசியில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்புரையாற்றினார். எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை இளமையுடன் இருப்பதாக கூறியதில் தன்னுடைய கால் வலி கூட தனக்கு மறந்து விட்டதாக கூறினார் . தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு ஒரு சங்கம் அமைக்கவேண்டும் என்றும் அதற்கு சரியான நபர் ரவிக்குமார் என்றும் கூறினார். அச்சங்கத்தில் தகுதியுடவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். விழா ஒன்பது மணியையும் தாண்டி நடந்துகொண்டிருந்ததால் இ.பா. அவர்கள் கால் வலியில் அவதி பட்டது தெரிந்தது இதை கருத்தில் கொண்டாவது பேசியவர்கள் கொஞ்சம் சுருக்கமாக பேசி இருக்கலாம்.

கொசுறு தகவல் 1: சாரு அவர்கள் கவர்ச்சியான ஒரு டீ.ஷர்ட் அணிந்திருந்தார் அதில் “don’t stare at my shoes ” என்று எழுதியிருந்தது. சுஜாதா விருது வழங்கும் விழாவில் இவர் அணிந்திருந்த ஷூவை பற்றி ஒரு வாசகர் இவரிடம் கேட்டு எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.

கொசுறு தகவல் 2: விழா ஆரம்பிக்கும் முன் வந்த அனைவருக்கும் டீயும் ஒரு சிறிய பெட்டியில் ‘அல்வாவும்’ கொடுத்தனர் மிகவும் சுவையாக இருந்தது.

கொசுறு தகவல் 3: மணற்கேணி என்ற இதழை அனைவருக்கும் இமயம் அவர்கள் இலவசமாக கொடுத்தார். அந்த இதழ் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. உள்ளே சில கவிதைகளை அங்கேயே படித்தேன் அருமையாக இருந்தது.

இவ்விழாவை நடத்திய மணற்கேணி பதிப்பகத்திற்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்க இங்கே கிளிக் செய்யவும்

“துயில் தொலைத்த காரிகை

கவிதை எழுத துடிக்கிறாள்

இவள் கவிதையை படிக்க

தொலைக்க நினைக்கிறேன்

என் துயிலை இன்று”

– பிரபு ராமகிருஷ்ணன்