இதுவரை எந்த கவிதை நூல் வெளியீட்டுு விழாவிற்கும் நான் சென்றதில்லை ஆகையால் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் ‘இதற்கு முன்பும் இதற்குப் பிறகும்’ என்ற கவிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு எப்படியாவது சென்றுவிட வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் காத்திருந்தேன்.

பல்லாவரத்தில் ஒரு வேலை இருந்ததால் அதை அவசரமாக முடித்துவிட்டு அங்கிருந்து நேராக தேவநேய பாவாணர் நூலகத்திற்கு விரைந்து சென்று சேர்வதற்குள் எஸ்.ராமகிருஷ்ணன் பேசி முடித்துவிட்டிருந்தார்.

நா முத்துக்குமார் பேசிகொண்டிருந்தார். பேசிய அனைவரும் மிகச்சிறப்பாக பேசினார்கள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு பிடித்த கவிஞர் பிரமீள், கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளையும் நான் நிறைய படித்துள்ளேன். இவ்விழாவில் கிடைத்த அனுபவம் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை இன்னும் ஆழமாக படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது.

விழாவிற்கு வந்திருந்த வாசகர் ஒருவர் எழுத்தாளர் சாரு பேசி முடித்தவுடன் அவருக்கு ஒரு மோதிரத்தை அணிவித்து அசத்தினார்.

மனுஷ்யபுத்திரன் பேசும்போது எழுத்தாளர் சுந்தர ராமசாமியை பற்றி ஒரு சம்பவத்தை கூறினார் எனக்கு வியப்பாக இருந்தது. தமிழ் எழுத்துலகில் ஜாம்பவானாக கருதப்படும் அவர் எப்படி இது போன்ற ஒரு காரியத்தை செய்தார் என்று தெரியவில்லை ஏன் அவருக்கு ஒரு சிறந்த கவிஞனின் கவிதை புத்தகத்திற்கு ஒரு முன்னுரையோ அபிப்ராயமோ சொல்ல மறுத்துவிட்டார்? இது ஒரு சின்ன சம்பவமாக இருந்தாலும் இத்தனை வருடம் கழித்து இதை மனுஷ்யபுத்திரன் நினைவு கூறும்போது கவனிக்கப்படுகிறது.

நம் சமகாலத்தின் சிறந்த கவிஞனான மனுஷ்யபுத்திரனை நாம் கொண்டாடவேண்டும். அவரின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் சென்றடையவேண்டும் என்று விரும்புகிறேன்.

please click these links to listen the speeches of the guests

மனுஷ்யபுத்திரன்

சாரு நிவேதிதா

பிரபஞ்சன்

தமிழச்சி

பாரதி கிருஷ்ணகுமார்

வசந்த பாலன்

if the links above not working plz click the link below

http://prabhuramakrishnan.podbean.com/

 

plz click here to download the speeches

http://www.filedropper.com/manushyaputhiran

இந்த பதிவுகளில் நடு நடுவே என் சிரிப்பு சத்தம் பயங்கரமாக கேட்கும் தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள் 🙂

அன்புடன்,

பிரபு ராமகிருஷ்ணன்

Advertisements