‘கன்னாடி கோப்பையில் நுரை வராமல் அழகாக பியரை ஊற்றுபவனும் ஒரு கலைஞனே’

என் நண்பன் எழுதிய பின்னூட்டம் “kannadi ku 3 suzhi ண dan varum…neenga beer bodai la ye type panningala? “

-அதற்கு நான் எழுதியது –

“எழுத்து பிழைகளுக்கு மன்னித்துவிடு நண்பா!!
தலையெழுத்தே பிழையாக இருக்க
எழுத்து பிழைக்கு வருந்தி என்ன பயன் எனக்கு.
சுழியும் கோப்பையும் ஒன்றாக கருதி
இரண்டு கோப்பையுடன் நிறுத்திவிட்டேன்.
குடித்துவிட்டு கவிதை எழுத நினைத்தது தவறுதான்
குடித்துவிட்டு பிதற்றினால் அது கவிதையாக முடியுமா?
அது உளறல்தானே?
அதை கவிதையென்று நினைத்தால் நம் நாட்டில் முக்கால்வாசி பேர்
கவிஞர்களே.
உளறலோ பிதற்றலோ என்ன பெயர் வைத்தாலும்
கவிஞனை கொண்டாட மறுக்கும்
இச்சமூகத்தில் வாழ்வதை விட
குடித்து உளறி சாவதே மேல் என்று கருதுகிறேன்.
உன் ஆசைப்படியே இன்னொரு சுழியை சேர்த்துக்கொள்கிறேன்
தலை கிறுகிறுக்க சாய்கிறேன் சொகுசு நாற்காலியில்”

– போதையுடன் பிரபு ராமகிருஷ்ணன்

Advertisements