உயிர்மை சார்பாக நடக்கும் அணைத்து விழாக்களுக்கும் எனக்கு அழைப்பிதழ் அஞ்சலில் வந்துவிடும் ஆனால் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் என்பதாவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியை பற்றி சாருவின் இணையத்தளத்தில் தான் பார்த்து தெரிந்துகொண்டேன். அப்போதே முடிவு செய்துவிட்டேன் இந்நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று உயிர்மை இந்த விழாவிற்கும் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர் ஆனால் சரியாக விழா நடக்கும் அதே நாளில்தான் வந்து சேர்ந்தது.

சரியாக 5 .30 க்கு விழா அரங்கிற்கு சென்றுவிட்டேன். வெளியே இந்திரா பார்த்தசாரதி அவர்கள் சிலருடன் நின்று பேசிகொண்டிருந்தார். அவரிடம் எப்படியாவது ஆடோக்ராப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை இரண்டு முறை முயற்சித்தும் முடியவில்லை ஆதலால் தயாராக அவர் எழுதிய எனக்கு பிடித்த ‘குருதிப்புனல்’ நாவலை கையில் வைத்திருந்தேன் லிப்டில் அவர் அரங்கம் இருக்கும் முதல் மாடிக்கு வந்தவுடன் அவரை மடக்கி அவரிடம் கையெழுத்து வாங்கிவிட்டேன். பிறகு சாரு அவர்களுக்கு வெளியே காத்திருந்தேன் அவர் எழுதிய ‘வரம்பு மீறிய பிரதிகள்’ புத்தகத்தில் கையெழுத்து வாங்கிடவேண்டும் என்று ஒரு சின்ன சபதம் 6 மணி வரை சாரு வரவில்லை பின்பு உள்ளே சென்று விட்டேன். கடைசியில் ஒரு வழியாக சாருவை சந்தித்து என்னை அறிமுகம் செய்துகொண்டு எனக்கு பிடித்த புத்தகமான வரம்பு மீறிய பிரதிகளில் கையெழுத்து வாங்கினேன்.

சுமார் 6 .30 க்கு மனுஷ்யபுத்ரனின் வரவேற்புரையுடன் விழா ஆரம்பமானது. தொடர்ந்து தமிழ் சமூகம் நம் எழுத்தாளர்களை உதாசீனப்படுத்துவது அவர்களுக்கு முறையான அங்கீகாரம் அளிக்காமல் இருப்பது பற்றி மிகவும் தெளிவாவகம், உண்மையாகவும் நன்றாக உரைக்கும் படியும் பேசினார் நிச்சயமாக இதை பதிவு செய்து அணைத்து சேனல்களிலும் ஒளிபரப்பி இருக்க வேண்டும் அட்லீஸ்ட் இணையத்திலாவது பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் எழுத்தாளர்களின் குரலாகவே அவரின் பேச்சி இருந்தது.கேரளாவில் ஒரு நாவலளுக்கு வெள்ளி விழா கொண்டாடும் அளவிற்கு எழுத்தாளர்களை கொண்டாடுகிறார்கள். இங்கு ஞான பீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு என்ன செய்தோம் என்று கூறினார் எனக்கு என்னை செருப்பால் அடித்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது ஒரு வாசகனாக நானும் எதுவும் செய்யவில்லையே என்று தோன்றியது.

பிறகு prof .சி.டி.இந்திரா அவர்கள் சுமார் நாற்பது நிமிடம் ஆங்கிலத்தில் நடு நடுவே தமிழிலும் பேசி சொர்பொழிவாற்றினார். அவருக்கு பிறகு ஆறு பேர் பேச இருக்க அவர் நாற்பது நிமிடம் பேசியது மிகவும் வேதனையான ஒன்று. இதுவே நான் என் நண்பர்களுடன் கும்பலாக போயிருந்தால் கைதட்டி ஒரு சின்ன கலாட்டா செய்து ஒரு இருபது நிமிடத்தை சேமித்திருப்பேன்.ஆனால் இந்த வயதிலும் அவர் இவ்வளவு முயற்சி எடுத்து இவ்வளவு நேரம் பேசியதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

பிறகு ஞானக்கூத்தன், இமயம், எஸ்.ராமகிருஷ்ணன், அ.ராமசாமி, ரவிக்குமார் பேசினார்கள். இமயம் அவர்கள் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைகள் பற்றி ஒரு மிக நீண்ட ஆய்வறிக்கையை படித்து காட்டினார் நன்றாகவே இருந்தது.
இந்த விழாவின் ஷோ ஸ்டாப்பர் எஸ்.ராமகிருஷ்ணன்தான் மிக அற்புதமாக பேசினார் அதை நான் பதிவு செய்திருக்கிறேன்.

கடைசியில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ஏற்புரையாற்றினார். எஸ்.ராமகிருஷ்ணன் தன்னை இளமையுடன் இருப்பதாக கூறியதில் தன்னுடைய கால் வலி கூட தனக்கு மறந்து விட்டதாக கூறினார் . தமிழகத்தில் எழுத்தாளர்களுக்கு ஒரு சங்கம் அமைக்கவேண்டும் என்றும் அதற்கு சரியான நபர் ரவிக்குமார் என்றும் கூறினார். அச்சங்கத்தில் தகுதியுடவர்கள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும் என்றும் கூறினார். விழா ஒன்பது மணியையும் தாண்டி நடந்துகொண்டிருந்ததால் இ.பா. அவர்கள் கால் வலியில் அவதி பட்டது தெரிந்தது இதை கருத்தில் கொண்டாவது பேசியவர்கள் கொஞ்சம் சுருக்கமாக பேசி இருக்கலாம்.

கொசுறு தகவல் 1: சாரு அவர்கள் கவர்ச்சியான ஒரு டீ.ஷர்ட் அணிந்திருந்தார் அதில் “don’t stare at my shoes ” என்று எழுதியிருந்தது. சுஜாதா விருது வழங்கும் விழாவில் இவர் அணிந்திருந்த ஷூவை பற்றி ஒரு வாசகர் இவரிடம் கேட்டு எழுதியிருந்தது ஞாபகம் வந்தது.

கொசுறு தகவல் 2: விழா ஆரம்பிக்கும் முன் வந்த அனைவருக்கும் டீயும் ஒரு சிறிய பெட்டியில் ‘அல்வாவும்’ கொடுத்தனர் மிகவும் சுவையாக இருந்தது.

கொசுறு தகவல் 3: மணற்கேணி என்ற இதழை அனைவருக்கும் இமயம் அவர்கள் இலவசமாக கொடுத்தார். அந்த இதழ் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கபட்டுள்ளது. உள்ளே சில கவிதைகளை அங்கேயே படித்தேன் அருமையாக இருந்தது.

இவ்விழாவை நடத்திய மணற்கேணி பதிப்பகத்திற்கும் உயிர்மை பதிப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றிகளை நெகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் உரையை கேட்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisements