சிறுகதை எழுதும் ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது சில காரணங்களால் அதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. சரி எப்படியாவது இந்த மாதம் ஒரு சிறுகதையாவது எழுதி விடலாமென்று நினைத்தேன். அடியேன் எதையும் முறைப்படி கற்றுக்கொள்ள விரும்புபவன் ஆனால் சிறுகதை எழுதுவதற்கு பயிற்சி வகுப்புகள் இருப்பதாக தெரியவில்லை ஆகையால் இணையத்தில் தேடி பார்க்கும் போது பா.ராகவனின் அருமையான குறிப்புகள் காணக்கிடைத்தன. சத்தியமாக இதை விட அருமையாக யாரும் நமக்கு சிறுகதை எழுத கற்றுத்தர முடியாது. இந்த குறிப்புகள் எனக்குள் ஒரு உத்வேகத்தையும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. விரைவில் நான் எழுதிய சிறுகதைகளை பதிவேற்றம் செய்வேன்.

அன்புடன்,
பிரபு ராமகிருஷ்ணன்

Advertisements