gnani

 எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஞானி சங்கரன் அவர்களை பற்றி எழுதவேண்டும் என்று நெடு நாட்களாய் நினைத்து கொண்டிருந்தேன் நான் படித்து ரசித்த எழுத்தாளர்கள் நிறைய பேர் உள்ளனர் ஆனால் என்னை பிரமிக்க வைத்த ஒரே எழுத்தாளர் இவர்தான். இவர் விமர்சிக்கும் மனிதர்கள் சாதாரணமானவர்கள் அல்ல அரசியலில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் எதையும் செய்ய துணிபவர்கள் அவர்களையே தன் எழுத்தின் மூலமாக கிழித்து தூக்கி எரியும் ஞானியின் தயிரியத்திற்கு நான் தலை வணங்குகிறேன். அவர் ஆனந்த விகடனில் எழுதிய “ஓ போடுவோம்” கட்டுரைகளை நான் தவறாமல் படித்ததுண்டு. சில நேரம் இவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதா என்று கூட எனக்கு தோன்றும், இவரின் அனல் பறக்கும் எழுத்தே அதற்கு காரணம். பயம் என்பது சிறிதும் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி எழுத முடியும். எது எப்படியோ ஞானியை போல் இன்னும் நிறைய பேர் நம் நாட்டிற்கு தேவை அவரை போற்றி பாதுகாக்க வேண்டும் என்று இந்த சமூகத்தை நான் கேட்டு கொள்ளகிறேன்.

இவன்,

பிரபு ராமகிருஷ்ணன் 

Advertisements